வாட்ஸ்அப் நிறுவனம் அதன் வெப் மற்றும் டெஸ்க்டாப் ஆப் உடன் லிங்க் செய்யப்பட மற்றும் லாக் இன் ஆக மற்றொரு பாதுகாப்பு அடுக்கை அதன் பிளாட்பார்மில் சேர்த்துள்ளது.
இனிமேல் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை தங்கள் கம்ப்யூட்டருடன் இணைப்பதற்கு முன்பு கைரேகை அல்லது பேஸ் ஐடியைப் பயன்படுத்தி அங்கீகரிக்கும்படி கேட்கப்படுவார்கள்.
இந்த கூடுதல் பாதுகாப்பின் பிரதான நோக்கம் என்ன?
இந்த கூடுதல் பாதுகாப்பு அடுக்கானது, நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஆனது உங்கள் கம்ப்யூட்டர் உடன் இணைவதை தடுக்கும்.
அதாவது வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் கூற்றுப்படி, டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப்பை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுக்க தனது மொபைல் ஆப்பில் இந்த கூடுதல் பாதுகாப்பு அடுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் ஏதேனும் பாதுகாப்பு ஓட்டை இருக்குமா?
கூறப்படும் பேஸ் மற்றும் பிங்கர் பிரிண்ட் அங்கீகாரமானது பயனரின் மொபைல் போன் வழியாக தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையிலேயே நடைபெறும் என்றும், குறிப்பிட்ட மொபைல் போனின் இயக்க முறைமையில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தகவல்களை தங்கள் நிறுவனத்தால் அணுக முடியாது என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இனிமேல் “இப்படி” செய்தால் தான் கம்ப்யூட்டருடன் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை இணைக்க முடியும்!
வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப் பயன்பாட்டை ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட் உடன் இணைக்க, பயனர்கள் இனிமேல் ஸ்மார்ட்போனில் பேஸ் அல்லது பிங்கர் பிரிண்ட் அன்லாக்கை பயன்படுத்துமாறு கேட்கப்படுவார்கள்.
இந்த செயல்முறை முடிந்ததும், பயனர்கள் ஸ்மார்ட்போனில் இருந்து QR குறியீடு ஸ்கேனரை அணுகலாம், அது ஒரு கம்ப்யூட்டருடன் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை இணைக்கும் செயல் முறையை நிறைவு செய்யும்.