Welcome to Jettamil

அதிகாலையில் கோர விபத்து – பல்கலைக்கழக மாணவி பலி, பலர் காயம்

Share

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து (AC bus) மதவாச்சிக்கும் இகிரிகொல்லாவக்கும் இடைப்பட்ட வளைவில் 145 வது மைல் கல்லிற்கு அருகில் உள்ள வளைவில் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது பஸ் உருண்டு அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளது. இதனால் பஸ்ஸில் பயணித்த பலர் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ரம்பேவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை