பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
அரச பாடசாலைகள் நாளை, ஜனவரி 21 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் குறித்த புதிய கால அட்டவணையின் விபரங்கள் இதோ:
முதலாம் தவணை (முதலாம் கட்டம்): நாளை (ஜனவரி 21) முதல் பெப்ரவரி 13 வரை நடைபெறும்.
இடைக்கால விடுமுறை: பெப்ரவரி 14 முதல் மார்ச் 2 வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
முதலாம் தவணை (இரண்டாம் கட்டம்): மார்ச் 3 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறும்.
இதேவேளை, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 06 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி நேரத் திருத்தங்கள் உரிய முறைமையின்றி செய்யப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.
இது தொடர்பாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், முறைகேடாகச் செயல்பட்ட தேசிய கல்வி நிறுவகத்தின் இரண்டு பெண் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதிப் பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





