Welcome to Jettamil

அமெரிக்க வீரர்கள் வீரமரணம் – ஜனாதிபதி ட்ரம்ப் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்

Share

அமெரிக்க வீரர்கள் வீரமரணம் – ஜனாதிபதி ட்ரம்ப் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்

குவைத்தில் உள்ள கட்டளை மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் வீரமரணமடைந்த ஆறு அமெரிக்க இராணுவ வீரர்களின் உடல்கள் டெலாவேரில் உள்ள டோவர் விமானப்படைத் தளத்திற்குக் கொண்டு வரப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் நேரில் வருகை தந்து, ‘கௌரவ இடமாற்ற’ நிகழ்வில் கலந்துகொண்டு வீரர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

ராணுவ விமானத்திலிருந்து வீரர்களின் உடல்கள் வாகனங்களுக்கு மாற்றப்பட்ட போது, ஒவ்வொரு பெட்டிக்கும் ஜனாதிபதி ட்ரம்ப் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது மிகவும் சோகமான நாள்; வீரர்களுக்கு மரியாதை செலுத்தியதில் ஆறுதலடைகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரும் பங்கேற்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை