Welcome to Jettamil

இலங்கையில் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகள்..!

Share

இலங்கையில் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகள்

2023 ஆம் ஆண்டில் மொத்தமாக 124 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தர பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், 55 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையும், 40 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையும், மற்றவை சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர Flucloxacillin Cap என்னும் மருந்தும் திரும்பப்பெறப்பட்டுள்ளதாகவும் அது ரத்மலானையில் உள்ள அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 2017 ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 600 தரக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதுடன் 2022 ஆம் ஆண்டில் 86 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை