Welcome to Jettamil

இலங்கையில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் மக்களுக்கான எச்சரிக்கை..!

Share

இலங்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் அஃப்லா டொக்ஸின் (Aflatoxin) எனப்படும் ஒர் வகை வேதியியல் பொருள் காணப்படுகின்றமை இன்று முக்கிய பேசு பெருளாக மாறி இருக்கிறது.

ஒரு சில இரசாயன கலவைகள் சேர்வையில் கொழுப்பில் வளரும் பங்கசு வகைகளால் Aflatoxin என்று அழைக்கப்படும் இந்த நச்சுப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.

Aflatoxin ஆனது அதிக செறிவில் ஓர் நச்சுப் பொருள் மாத்திரம் அல்லாது குறைந்த செறிவில், நமது நீண்டகால பாவனையின் பின் (chronic exposure) ஒரு புற்றுநோய் உருவாக்கியாகவும் தொழிற்படுகிறது.

நமது உடலில் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட P-53 எனும் பரம்பரை அலகில் பாதிப்பை ஏற்படுத்தி பித்தப்பை புற்றுநோயை உருவாக்கும் தூண்டுதலை கொண்ட aflatoxin அதிக செறிவில் உடலுக்குள் புகுந்து உடனடியாக ஈரலுக்கு நஞ்சாகி (Hepatotoxicity) செயலிழக்கச் செய்யும் ஆற்றல் உடையது.

நாம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள், இறைச்சி, விதைகள், பாலுணவு மற்றும் தானியங்கள் உள்ளிட்ட கொழுப்பு சத்து கொண்ட உணவுகள் நீண்டகால சேமிப்பில் இருக்கும் போது Aspergillus parasiticus மற்றும் Aspergillus flavus என்பவை வளர்ந்து பின் Aflatoxin எனும் பொருளை உற்பத்தி செய்கின்றன.

இதனை எவ்வளவு சுத்திகரித்தாலும் உணவில் இருந்து Aflatoxin எனும் பொருளை முழுமையாக அகற்றப்படுவது இல்லை.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drug Administration)
Aflatoxin சேர்க்கப்பட்ட செறிவு உள்ளடக்கமாக 20-300 ppb
(Parts per billion) என்னும் அளவுத்திட்டத்தை நிர்ணயம் செய்துள்ளது.

பல வருடங்களுக்கு முன் 1960 ஆம் ஆண்டு London நகரத்தில் இல் சடுதியாக 100000 மேற்பட்ட வான் கோழிகள் திடீரென இறந்து பின் Turkey X என்ற நோயை ஆராய்ச்சி செய்தபோது அவ் வான் கோழிகளுக்கு வழங்கப்பட்ட கச்சானில் இருந்து முதன் முதலில் இந்த Aflatoxin அடையாளம் காணப்பட்டது.

இந்த சூழ்நிலையில் நமது நாட்டு மக்களே, சிறிது காலம் உள்நாட்டு தேங்காயெண்ணைக்கு மாறுங்கள். நமது நாட்டில் இவ்வளவு தென்னை மரங்களை வளங்களாக வைத்துக் கொண்டு தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்வதெல்லாம் நமது துரதிர்ஷ்டம் எனலாம்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை