தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புத்தாண்டின் போது பயண கட்டுப்பாடு அல்லது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த எதிர்பார்க்கப்படவில்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மக்கள் கொரோனா காலப்பகுதியில் புத்திசாலித்தனமாக செயற்படுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
உயிர்த்த ஞாயிறு தினத்தின் போது முன்னெடுக்கப்பட்ட விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் போன்றே புத்தாண்டின் போதும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாகாப்பு பிரிவினர் தயார்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.