Welcome to Jettamil

உணவு மிச்சம் வைத்ததற்கு 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Share

இரவு உணவை மிச்சம் வைத்ததற்கு 11 வயது சிறுமியின் வாயில் சுடுநீரை ஊற்றி கொடுமைப்படுத்திய சித்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனால் சிறுமியின் வாயில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது, மேலும் குறித்த சிறுமி தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமி கூறியதாவது, உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிடுமாறு சித்தி கட்டாயப்படுத்தியதாகவும், கட்டையால் தாக்கியும், சுடுநீரை வாயில் ஊற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறுமியின் தாய் தந்தையை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்றுள்ளதுடன், சிறுமியின் தந்தை இரு குழந்தைகளுக்கு தாயான இந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை