2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் நான்காம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
ஒக்டோபர் நான்காம் திகதி முதல் ஒக்டோபர் 30ஆம் திகதிவரை குறித்த பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
அத்துடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மூன்றாம் திகதி இடம்பெறும் என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.