Welcome to Jettamil

உலங்குவானூர்தி விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பலி…

Share

குன்னூர் அருகில் இந்திய விமானப்படையின் உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில், முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர் என்று, இந்திய விமானப் படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சூளுர் விமானப்படைத் தளத்தில் இருந்து நேற்று நண்பகல்  முப்படைகளின் தளபதி ஜெனரல் ராவத் அவரது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகள் 9 பேருடன், புறப்பட்ட எம்ஐ -17 உலங்குவானூர்தியில், அதனை இயக்கும் நான்கு விமானப்படை அதிகாரிகள் இருந்தனர்.

குன்னூரில் இந்த உலங்குவானூர்தி  விபத்துக்குள்ளாகியதில், ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

இவ் விபத்தில் குறூப் கப்டன் வருண் சிங் 80 வீதமான எரிகாயங்களுடன் வெலிங்டன் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை உலுக்கிய உலங்குவானூர்தி விபத்தில், ஜெனரல்  பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் உயிரிழந்தமை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளனர்.

தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜெனரல் ராவத்தின் மரணம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த உலங்குவானூர்தி விபத்து தொடர்பாக, நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை