Welcome to Jettamil

தாம்பத்திய உறவு, திருமண உறவின் கடமை என்று பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு, பதிலுக்கு மனைவி செய்த அதிரடி செயல்..!

Share

திருமணத்துடனான உறவில் தாம்பத்திய உறவு என்பது ஒரு கடமை என்று தீர்ப்பு வழங்கிய பிரான்சை, பெண் ஒருவர் ஐரோப்பிய நீதிமன்றத்துக்கு இழுத்துள்ள நிகழ்வு பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐரோப்பிய ஆணையத்தின் மனித உரிமைகள் நீதிமன்றத்திலேயே பிரான்சுக்கு எதிராக வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பெண் ஒருவர் தொடுத்த விவாகரத்து வழக்கு ஒன்றில், அவர் தனது கணவருடன் தாம்பத்திய உறவு ஏற்படுத்த மறுத்ததால் அவருக்கு எதிராக, பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், குறித்த பெண் இரண்டு பெண்ணிய அமைப்புகளின் உதவி பெற்று , ஐரோப்பிய ஆணையத்தின் உடைய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் பிரான்சுக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணிய அமைப்புகள் இணைந்து , பிரான்ஸ் நீதிமன்றில் வழங்கிய தீர்ப்பு மனித உரிமைகள் மற்றும் அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று கூறி வாதத்தை முன்வைத்துள்ளன.

2019 ஆம் ஆண்டு Versailles இல் அமைந்துள்ள மேல் முறையீட்டு நீதிமன்றம், குறித்த பெண் தன்னுடைய கணவருடன் தாம்பத்திய உறவு வைக்க மறுப்பு செய்ததால் விவாகரத்துக்கு அனுமதி வழங்கியது.

இருவர் இணைந்து பகிர்ந்து வாழும் திருமண வாழ்வில், அந்த பெண் திருமணத்தின் கட்டாயமான கடமையான தாம்பத்திய உறவு அடங்கலான கடமைகளை செய்ய தவறிவிட்டதால் விவாகரத்து வழங்குவதாக தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில் குறித்த பெண்ணிய அமைப்புகள், திருமணம் என்பது தாம்பத்திய உறவு என்னும் சேவையை வழங்கும் ஒர் அமைப்பு அல்ல, மற்றும் அப்படியும் இருக்கவும் கூடாது என்று வாதிடுகின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை