Welcome to Jettamil

தாய்ப்பால் புரைக்கேறி 25 நாள் சிசு உயிரிழப்பு !

Share

திருகோணமலை – தம்பலகாமம், பொற்கேணி பகுதியில் பிறந்து 25 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்துள்ளது.

நேற்றையதினம் (திங்கட்கிழமை) இரவு குழந்தைக்கு பாலுாட்டி தூங்க வைத்த  தாய், மீண்டும் 12 மணியளவில் குழந்தையை பார்த்துள்ளார்.

குழந்தையின் வாய், மூக்கு  பகுதிகளில் நுரை வருவதனை அவதானித்த அவர், உடனடியாக குடும்பத்தாரின் உதவியுடன் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

ஆனாலும் குழந்தை முன்கூட்டியே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் பிரேத பரிசோதனைக்காக  சிசுவின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பரிசோதனை நிறைவடைந்ததும் குடும்பத்தினரிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை