Welcome to Jettamil

பிரான்சில் புதிதாக 35,345 பேருக்கு கொவிட் தொற்று!

Share

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் கொவிட் நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உட்பட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பிரான்ஸ் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவாக பதிவாகி வந்தது.

இந் நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 35,345 ஆக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,52,022 ஆக உயர்வடைந்துள்ளது.

இப் பாதிப்பு காரணமாக மேலும் 185 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 92,167 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,79,646 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 38,80,209 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் தற்போது ஆறாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை