Welcome to Jettamil

வடமராச்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்ற கன்டர் வாகனம் விபத்து…

Share

யாழ் வடமராச்சி வல்லிபுரகுறிச்சி பகுதியில் நேற்றையதினம் (10) வேக கட்டுப்பாட்டை இழந்த கன்டர் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை நிறுத்தியபோது வாகனத்தை நிறுத்தாது சாரதி தொடர்ச்சியாக பயணித்த நிலையில்,

விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தொலைத்தொடர்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் வாகனத்தை கைப்பற்றிய பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்று (10) அதிகாலை குடத்தனை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திர சாரதியை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை