வவுனியா செட்டிக்குளம் பகுதி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவன் இறந்த நிலையில் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார்.
அந்த சிறுவன் நேற்று மாலையில் தனது உறவினர் ஒருவருடன் வயல்பகுதிக்கு சென்றுள்ளான். இந்நிலையில் நீண்ட நேரத்தின் பின்னர் சிறுவன் வீடு சென்றிருப்பார் என்று எண்ணிவிட்டு குறித்த உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இருந்தபோதும் குறித்த சிறுவன் வீட்டிற்கு திரும்பாத நிலையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் வயல் பகுதியில் குறித்த சிறுவன் விழுந்து கிடப்பதை அவதானித்த பெற்றோர்கள் அவனை உடனே மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதன்போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், இதற்கு முன்பே மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த துயர சம்பவத்தில் மருதமடுவ பகுதியை சேர்ந்த வீரசிறி தேனுகருக்சான் எனும் 7வயதுடைய சிறுவனே மரணமடைந்துள்ளான்.
அத்துடன் குறித்த சிறுவனை பாம்பு தீண்டி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற கோணத்தில் செட்டிகுளம்
பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.