இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக, திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம்(12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு திறைசேரியின் செயலாளர் இவ் விடயத்தை கூறினார்.
மேலும் தற்போது இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் தனிபட்ட பயன்பாட்டுக்காக வாகனங்கள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் அபிவிருத்தி பணிகளுக்காக வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில்தான் தற்போது நாட்டின் அன்னிய செலவாணி ரீதியில் டொலரின் பெறுமானத்தை சேமிப்பதற்காக இவ் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் வாகன இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி வாகனங்கள் இறக்குமதி நடவடிக்கையின் போது நாட்டின் அபிவிருத்திக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கும் வகையில் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மேலும் குறிப்பிட்டார்.