அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 204.62 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 199.80 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 283.39 ரூபாவாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 245.84 ரூபாயாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.