Welcome to Jettamil

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தனியார் பஸ் உரிமையாளர்கள்..!

Share

இலங்கையில் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அதுமட்டுமல்லாது இன்னும் இரண்டு வாரங்களில் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அனைவருக்கும் கொவிட்19 தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இத் தடுப்பூசியை அரசாங்கம் வழங்க தவறினால் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை