Welcome to Jettamil

அரச வெசாக் விழா இம்முறை யாழில் – பிரதமர்..!

Share

அரசின் வெசாக் நிகழ்வை இம்முறை யாழ்ப்பாணம் – நாகதீப ரஜ மகா விகாரையில் நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.

இவ் வருடம் அரச வெசாக் நிகழ்வை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு, நாகதீப ரஜ மகா விகாரையை மையமாக வைத்தே நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் 65 விகாரைகள் மற்றும் 35 அறநெறி பாடசாலைகளை ஒன்றாக இணைந்து இவ் வருடம் அரச வெசாக் நிகழ்வை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிற்கு பிரதமரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

அரச வெசாக் நிகழ்வானது இம்முறை வழக்கமான பாரம்பரிய வெசாக் விழாவிலிருந்து வேறுபட்டதாக, பிற மதங்களுடன் இணைந்த வகையில் அரச வெசாக் நிகழ்வை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளமை இம்முறை அரச வெசாக் நிகழ்வின் விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்வுகள் தொடர்பான செயற்பாடுகளை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களங்கள் ஒன்றாக இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை