Welcome to Jettamil

உத்தரக்காண்ட் பனிச்சரிவில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு..!

Share

உத்தரக்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கிய 8பேர் உயிரிழந்துள்ளதுடன், 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

உத்தரக்காண்ட்- சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவும் பலத்த மழையும் கடந்த சில நாட்களாகவே நிலவி வருகின்றது.

நிதி பள்ளத்தாக்கிலுள்ள சும்னாவில் பனிப்பாளங்கள் சரிந்து விழுந்ததில் சாலைப் பணியில் ஈடுப்பட்டிருந்த  ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.

சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவம், எல்லைச் சாலைகள் அமைப்பு, இந்தோ திபெத் எல்லைக் பாதுகாப்பு படை ஆகியன ஒன்றிணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதுடன்  384 பேர் மீட்கப்பட்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை