Welcome to Jettamil

கிணற்றில் விழுந்த விளையாட்டுப் பொருளை எடுக்க முயன்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்..!

Share

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கிணற்றுக்குள் விழுந்த நிலையில் இரண்டரை வயதுடைய சிறுமியொருவர் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் கூறியுள்ளனர்.

தேற்றாத்தீவு பகுதி பாலமுருகன் வீதியைச் சேர்ந்த முன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான சிறுமி , உதயராஜ் ஹம்சவர்த்தினியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

கடந்தது செவ்வாய்க்கிழமை(16) தனது வீட்டில் வழக்கம் போல் விளையாடிய சிறுமி , தனது விளையாட்டுப் பொருளொன்று கிணற்றில் வீழ்ந்ததனை அடுத்து அதனை தான் எடுக்க முற்பட்டபோது தவறி கிணற்றில் வீழ்ந்துள்ளார் .

சிறுமி கிணற்றில் வீழ்ந்ததை அறிந்து கொண்ட சிறுமியின் தந்தை கிணற்றிலிருந்து சிறுமியை மீட்டு களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்த போதும்,

குறித்த சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளதாக விசாரணையின் ஊடாக தெரியவந்துள்ளது .

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை