Welcome to Jettamil

பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் மதுபான சாலைகளுக்குப் பூட்டு!

Share

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணிக்கு குறித்த கட்டுப்பாடு அகற்றப்படுவதுடன் அதேநாள் இரவு 11 மணிக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுலுக்கு வரவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 28ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை குறித்த பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே வரும் 25ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் மதுபான சாலைகளைத் தொடர்ந்து மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை