இன்றையதினம் நாடாளாவிய ரீதியில் பல்வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலை நிறுதப் போராட்டத்திற்கு வவுனியா அரச பல்வைத்திய அதிகார சங்கமும் தமது ஆதரவை தெரிவித்துள்ளது.
வவுனியா பொது வைத்தியசாலையில் இன்றையதினம் காலை முதல் பல் வைத்தியர்கள் கடமைக்கு சமுகமளிக்காமல் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்த போதிலும், அவசர சிகிச்சைகள் வழமைபோல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் பல்வைத்திய சேவைக்கு எதிரான சதிகளை முறியடிக்கும் வகையில் குறித்த அடையாள பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.