Welcome to Jettamil

பிளாஸ்டிக்கை உண்ணும் மீன்கள், மனிதனால் மனிதனுக்கே ஆபத்து..!

Share

நாம் தினமும் பயன்படுத்தும் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை கடலிலும் மற்றும் நீர் நிலைகளிலும் இலகுவாக வீசிவிடுகிறோம் .

குறிப்பாக மழைகாலங்களில் ஆறுகள் மற்றும் நீரோடைகள் ஊடாக செல்லும் தண்ணீர், அதனுடன் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களையும் கடலுக்கு அடித்து கொண்டு செல்கிறது .

இவ்வாறு கடலுக்கு வந்து சேரும் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை மீன்கள் தமது உணவு என எண்ணி அவற்றை உண்டு விடுகின்றன .

இதன் விளைவாக தற்போது பெரும்பாலான மீன்களின் உடலுக்குள் பிளாஸ்ரிக் பொருட்கள் கலந்து இருப்பதை அவதானிக்க முடியும் .

இந்த விடயம் தொடர்பில் சென்னையில் பிடிபடும் மீன்கள் எவ்வாறு உள்ளது என்று, சென்னையில் அமைந்துள்ள தேசிய கடற்கரை மையம் சார்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆய்வில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

மீன்களின் செதில்கள் மற்றும் உடல் பாகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த போது அவற்றில் 5 மில்லி மீற்றர் அளவுக்கும் குறைவான அளவுடைய சிறு துகள்கள் அதிக அளவில் காணப்பட்டன .

ஒரு சில மீன்களில் 1.93 மில்லிமீற்றரில் இருந்து 2.03 மில்லிமீற்றர் அளவுக்கு பிளாஸ்ரிக் சிறு துகள்கள் காணப்பட்டன .

இந்த மீன்கள் குறிப்பாக சிவப்பு மற்றும் இளஞ் சிவப்பு நிறம் கொண்ட பிளாஸ்ரிக் கழிவுகளையே அதிகம் தமது உணவு என கருதி சாப்பிட்டுள்ளனவாம்.

இந்த பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் நமது உடலில் சேரும் போது தசைகள் பாதிக்கப்படும் .

அத்துடன் நமது நரம்பு மண்டலங்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டு மூளையில் தாக்கத்தை உருவாக்கும்.

மேலும் இனப்பெருக்க விருத்தி பிரச்சினைகள் ஏற்படும், தைரோய்டு பிரச்சினை மற்றும் புற்றுநோய் என்பனவும் ஏற்படுவதற்கு அதிக சந்தர்ப்பம் உண்டு .

அத்துடன் கடல்களில் சேரும் பிளாஸ்ரிக் துகள்கள் பல்வேறுபட்ட வகைகளில் ஆபத்தை உண்டாகும்.

இதன் காரணமாக மீன்கள் இனம் விரைவாக அழியும் நிலை தோன்றும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை