Welcome to Jettamil

பேராசையால் யாழ்ப்பாணத்தில் பறிபோன இருவரது பல இலட்சம் ரூபா பணம்!

Share

பேராசையால் யாழ்ப்பாணத்தில் பறிபோன இருவரது பல இலட்சம் ரூபா பணம்

சமூக வலைத்தளங்களின் மூலம் யாழ்ப் பாணத்தில் சுமார் 26 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இரு முறைப்பாடுகள் பாதிக்கப்பட்டவர்களால் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

இணையம் மூலம் முதலீடு செய்து பணம் ஈட்டலாம் என்று ஆசையூட்டப்பட்டே இந்த மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்கள் மூலமே இந்தத் தொடர்புகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு ஏமாற்றப்பட்ட இருவர் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். ஒருவர் சுமார் 20 லட்சம் ரூபாவையும், மற் றையவர் சுமார் 6 லட்சம் ரூபாவையும் இழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்ப டுகின்றது.

சமூகவலைத்தளங்கள் மூலம் மேற் கொள்ளப்படும் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை