Welcome to Jettamil

மக்களுக்கு மீண்டும் 5000 ரூபா‌ய் நிவாரணம்..!

Share

நாட்டில் தற்போது காணப்படும் பயணத்தடை எதிர்வரும் 7ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கமைய மீண்டும் மக்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன .

பொருளாதார நெருக்கடியில் வாழும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள் ள து.

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பயண கட்டுப்பாடு நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிகவும் குறைந்த பொருளாதாரத்தில் வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது.

அதையடுத்து மக்களுக்காக நிவாரணம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை