Welcome to Jettamil

மரக்கறிகளும் இனி சலுகை விலையில், லங்கா சதொச இல் அரசு புதிய திட்டம் அறிமுகம்..!

Share

கடந்த சில வாரங்களுக்கு முன் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு பல்வேறு விலைக்குறைப்பு ஏற்படுத்தப்பட்ட நிலையில் தற்போது லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக, நுகர்வோருக்கு சலுகை விலையில் பொருட்களை வழங்கும் வகையிலான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலகம் மற்றும் சமுர்த்தி திணைக்களம் என்பன இணைந்து இவ் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

முதற்கட்டமாக இந்த வேலைத்திட்டம் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, மாவட்டங்களை உள்ளடக்கி செயற்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, மேல் மாகாணத்திலுள்ள மக்களுக்கு காய்கறிகளை சலுகை விலையில் பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட 75 சதொச வியாபார நிலையங்கள் ஊடாக, சலுகை விலையில் காய்கறிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை