Welcome to Jettamil

மறைந்த நடிகர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய ஜீவன் தொண்டமான்

Share

மறைந்த நடிகர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய ஜீவன் தொண்டமான்

இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று (02.01.2024)நேரில் தேமுதிக தலைமை கழகத்தில் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், பிரபல தமிழ் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் திகதி உடல்நல குறைவால் உயிரிழந்திருந்தார். விஜய்காந்த் ,ஈழத்தமிழர்கள் மீது பெரும் அன்பு கொண்டவர் ஆவார். ஈழத்தமிழ் மக்கள் கவலையில் இருக்க தான் தனது பிறந்தநாளைகூட கொண்டாடமாட்டேன் என இருந்த ஒப்பற்ற நடிகராவார்.

இந்நிலையில் அவரது மறைவு தமிழக மக்களை மட்டுமல்லாது இலங்கைத் தமிழர்களையும் வேதனை கொள்லச்செய்திருந்தது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை