தனியார் வகுப்புக்களை மீண்டும் மேல் மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
எனவே, எதிர்வரும் ஏப்ரல் 12 திகதி முதல் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பிக்க முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.
ஆரம்பத்தில், மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்கள் ஜனவரி 25 முதல் மீண்டும் தொடங்கப்பட்ட போதும் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்திருந்தது.
இதனையடுத்து சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக தனியார் வகுப்புக்கள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.