Welcome to Jettamil

முதலை தாக்கி ஒரு கையை இழந்த குடும்பஸ்தருக்கு வாழ்வாதாரம் கருதி 3 ஆடுகள் வழங்கி வைப்பு!

Share

முதலை தாக்கி ஒரு கையை இழந்த குடும்பஸ்தருக்கு வாழ்வாதாரம் கருதி 3 ஆடுகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிசோலை 9ம் வட்டாரத்தைச் சேர்த கிஸ்ணமூர்த்தி ரூபதர்சன் என்னும் குடும்பஸ்தர் மீன்பிடித் தொழிலுக்காக ஆற்றுக்கு சென்றபோது முதலை ஒன்றால் தாக்கப்பட்டு அவர் ஒரு கையை இழக்கவேண்டி ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம் முற்றிலும் பதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கனடாவில் வசித்துவருபவரும் உதவும் பொற்கரம் அமைப்பின் ஸ்தாபகருமான சமூக சேவையாளர் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கனடாவில் ‘உதயன்’ பத்திரிகையின் அதிபரும் பிரதம ஆசிரியருமான லோகேந்திரலிங்கம் அவர்களின் நிதி அன்பளிப்பில் 3 ஆடுகள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்பெற்றது.

இதற்கு உண்டு சக்தியாக இருந்த உதவும் பொற்கரம் அமைப்பின் ஸ்தாபகருமான திரு .விசு.கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கனடா உதயன் பத்திரிகை ஆசிரியருமான நாகமனி லோகேந்திரலிங்கம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை