Welcome to Jettamil

மூதாட்டியிடம் தாலியை அபகரித்த இருவர் கைது!

Share

மூதாட்டியிடம் தாலியை அபகரித்த இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் தேன் விற்பனையில் ஈடுபடுவது போல பாசாங்கு செய்து மூதாட்டியிடம் 7 பவுண் பெறுமதியான தாலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் மற்றும் தெல்லிப்பழையை பகுதியைச் சேர்ந்த முறையே 50 , 41 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை – தொண்டமானாறு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்ப்பட்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை