Welcome to Jettamil

யாழ் புதிய பேருந்து நிலைய பெயர்ப்பலகைகளில் மேலே வந்த தமிழ்!

Share

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய புதிய பேருந்தில் மொழிப்பிரச்சினை தற்போது சீர்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் யாழ் நகரப்பகுதியிலுள்ள முனீஸ்வரன் வீதியில் தூர பிரதேசங்களுக்கான பேருந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

கடந்த ரணில் அரசாங்க காலத்தில் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் கடந்த மாதம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரினால் திறந்துவைக்கப்பட்டது.

அதன்போது பேருந்து நிலையத்திலுள்ள மொழிப்பிரச்சினை அன்றைய நிகழ்வில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

அந்த நிலையத்தை மாநகர சபை பொறுப்பெடுத்ததன் பின்னர் மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதன்பின்னர் முதல்வர் மணிவண்ணனின் உத்தரவிலும் மாநகரசபை உறுப்பினர் பார்த்திபனின் மேற்பார்வையின்கீழும் தற்போது பெயர்ப்பலகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை