யாழ்ப்பாணத்தில் தற்பொழுது விவசாயிகள் உருளைக்கிழங்கு செய்கை அறுவடைகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில்,
அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து அறுவை செய்யும் உருளைக் கிழங்குகளை கொள்வனவு செய்யுமாறு பிரமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் லங்கா சதோச நிறுவனத்திற்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
இதற்கான விலையிடலாக ஒரு கிலோ கிராம் உருளைக் கிழங்கினை விவசாயிகளிடமிருந்து 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரையிலும், மானிய விலையில் கொள்வனவினை மேற்கொள்ளுமாறு பிரதமரால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அளவில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில்,
இந்த விடயம் தொடர்பில் உரிய கண்காணிப்பு செயற்பாடுகள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் யாழ் உருளைக்கிழங்குகளுக்கு தென்னிலங்கை மக்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுவதால்,
ஏனைய உருளைக்கிழங்குகளை விடவும் யாழ்ப்பாணத்தின் உருளைக்கிழங்கு மிக வாசமும் சுவையும் அதிகம் என்றும் அரசின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.