முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாக சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் பேரூந்து நடத்துனர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக 40 ஆண்டுளுக்கும் மேலாக கோலோச்சி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
#HBDSuperstarRajinikanth என்றும் #Thalaiva என்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ரஜினிகாந்தின் 71-வது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் போயஸ்கார்டன் அவரது இல்லம் முன்பு கூடிய வெளியே நள்ளிரவில் 12 மணி அளவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.