வட மாகாணத்தில் நேற்றைய தினம் 43 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதோடு இவர்களுள் 22 பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
நேற்றைய தினம் 705 நபர்களும் மேற்கொள்ளப்பட்ட பி.சி. ஆர். சோதனையிலேயே இவ்வாறு 43 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 22 பேரில் 11 பேர் வசாவிளான் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் ஆவர்.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் 17 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 4 பேருக்குமாகவே, வட மாகாணத்தில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.