Welcome to Jettamil

வரி செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கைத்தொலைபேசிகள் !

Share

வரி செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கைத்தொலைபேசிகள்

வீதித் தடையைப் பயன்படுத்தி வாகனங்களைச் சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கையடக்கத் தொலைபேசி மோசடிகள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.

நேற்று காலை பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீர்கொழும்பு – கொழும்பு வீதியில் வீதித் தடையைப் பயன்படுத்தி வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

இதன்போது சந்தேகத்துக்கிடமான வகையில் காணப்பட்ட வேன் ஒன்றைச் சோதனையிட்டபோது, வேனுக்குள் ஏராளமான கைத்தொலைபேசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வேனில் இருந்த இருவரிடம் விசாரணை நடத்தியதில், இந்த கையடக்கத் தொலைபேசிகள் வரி செலுத்தப்படாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது தெரிய வந்ததுள்ளது.

பயன்படுத்தப்படாத 246 கையடக்கத் தொலைபேசிகளும், வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்ட 77 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டு பேலியகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தைக்கு பயந்து இரண்டு நாட்களாக மரத்தில் இருந்த வயோதிபர்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை