ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில, குறைந்தபட்சம் பத்து எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதிக்கு இடையில் இரண்டு டீசல் கப்பல்கள் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
50 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 10 ஆயிரம் மெட்ரிக் தொன் மண்ணெண்ணெயை வழங்குவதற்கு மலேசிய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
மலேசிய அதிகாரிகளுடன் மூன்று நாட்கள் நடத்திய பேச்சு வார்த்தையின் பலனாக இது நடந்துள்ளது.
ஜூலை 10 அல்லது 11 ஆம் திகதி இந்த பெட்ரோல் கப்பலை எதிர்பார்க்கிறோம்.
இந்த நாட்களில் கப்பல் வரத் தவறினால், மாற்று வழிகள் குறித்து லங்கா ஐஓசி உடன் ஆலோசித்து வருகிறோம்.
விரைவில் எரிபொருள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தலா 1 இலட்சத்து 35ஆயிரம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயுடன் இரண்டு கப்பல்கள் ஜூலை 10 அல்லது 11 ஆம் திகதியும். ஓகஸ்ட் 9 மற்றும் 12ஆம் திகதியும் வரவுள்ளன.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் கப்பல்கள் இரண்டு, ஜூலை 22 அல்லது 23 ஆம் திகதிகளில் எதிர்பார்க்கப்படுகிறது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.