Welcome to Jettamil

விவசாயிகளுக்காக மீள அறவிடப்படாத 20 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்க திட்டம்

Share

இம்முறை பெரும் போகத்தில் நெற்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக மீள அறவிடப்படாத 20000 ரூபா எனும் அதிகபட்ச தொகையிலான நிதி உதவியை பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த நிதியுதவியை வழங்கவுள்ளது.

இதன் பிரகாரம் ஒரு ஹெக்ரெயர் அல்லது அதற்கு குறைவான விவசாய நிலங்களில் நெற்செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளுக்காக அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபா நிதியுதவி அளிக்கப்படவுள்ளது.

ஒரு ஹெக்ரெயருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் நெற்செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளுக்காக அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நெற்செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளுக்காக மாத்திரம் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதுடன் அவர்களின் வங்கிக் கணக்குகளில் குறித்த நிதி நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளதென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

இம்முறை பெரும் போகத்தில் 8 இலட்சம் ஹெக்ரெயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் அனைத்து விவசாயிகளும் உரத்தை கொள்வனவு செய்வதற்காக இந்த நிதியுதவியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக 8 பில்லியன் ரூபாவை செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் 12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதெனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை