2026 ஐ.பி.எல் மினி ஏலம்: சென்னை சூப்பர் கிங்ஸ் முக்கிய வீரர்களை நீக்கத் திட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடருக்கான மினி ஏலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 முதல் 15ஆம் திகதிக்குள் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையொட்டி, ஒவ்வொரு அணியும் நவம்பர் 15ஆம் திகதிக்குள் தாங்கள் தக்கவைக்கப்போகும் மற்றும் விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக அணியிலிருந்து சில முக்கிய வீரர்களை நீக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திரிப்பாதி, டேவான் கான்வே மற்றும் சாம் கரண் ஆகியோரை சென்னை அணி விடுவிக்க தீர்மானித்துள்ளது.
இந்த வீரர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், கிடைக்கும் தொகையைக் கொண்டு சென்னை அணி மினி ஏலத்தில் முக்கிய நட்சத்திர வீரர்களை வாங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுள், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிவைத்து ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கோப்பையைக் கைப்பற்றியிருந்தது.





