செம்மறி ஆடு என்றாலே, அதன் கம்பளி தான் ஓர் அழகான தோற்றத்தையே அதற்கு கொடுக்கும், ஆனால் அதுவே சில வேளைகளில் ஆபத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.
இவ்வாறாக அவுஸ்திரேலியாவின் மெல்பேணுக்கு அருகிலுள்ள காடொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட
ஓர் செம்மறியாடு சுமார் 35 கிலோ கிராம் கம்பளியுடன் தனது உடல் முழுவதும் சுமையை சுமக்க முடியாமல் காணப்பட்டுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் ஆடும் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த எட்கர் மிஷனின் பண்ணை சரணாலய அதிகாரிகளால் இதன் சுமை விடுவிக்கப்பட்டு சரணாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.