சுவிட்சர்லாந்து சென்றார் பிரதமர் ஹரிணி!
சுவிட்சர்லாந்தின் டெவோஸ் (Davos) நகரில் நடைபெறும் 56 ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum – 2026) வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (19.01.2026) அதிகாலை சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
இன்று ஜனவரி 19 முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
“உரையாடலின் உத்வேகம்” (A Spirit of Dialogue) எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு மாநாடு கூட்டப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் தலைவர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் என 3,000-க்கும் மேற்பட்ட சர்வதேசப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்கின்றனர்.
இந்த விஜயத்தின் போது, சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பிரதமர் ஹரிணி உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.





