Welcome to Jettamil

அயோத்தி ராமர் கோயிலுக்கு 108 அடி ஊதுபத்தி: 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வாசனை

Share

அயோத்தி ராமர் கோயிலுக்கு 108 அடி ஊதுபத்தி: 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வாசனை

இந்தியா – அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வில் பயன்படுத்துவதற்காக விசேடமாக 108 அடி நீள ஊதுபத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவில் தயாரிக்கப்பட்ட இந்த ஊதுபத்தி 3,610 கிலோ எடையும், 108 அடி நீளமும் மூன்றரை அடி அகலமும் கொண்டது.

இந்த ஊதுபத்தி பற்ற வைத்தால் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வாசனை பரவும் என்றும் ஒன்றரை மாதங்களுக்கு தொடர்ந்து எரிந்து வாசனையை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22 ஆம் திகதி காலை கும்பாபிசேக நிகழ்வு நடைபெற உள்ளது.

இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஊதுபத்தி பயன்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் ஊதுபத்தியை வதோதராவில் இருந்து அயோத்திக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்காக பிரம்மாண்ட பாரவூர்தி வடிவமைக்கப்பட்டு அதில் ஏற்றப்பட்டுள்ளது.

இதை பத்திரமாக கொண்டு செல்லும் வகையில் நிர்வாகிகள் சிலர் ஊதுபத்தி ஏற்றி செல்லும் பாரவூர்தியில் பயணம் செய்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை