Welcome to Jettamil

தந்தை மற்றும் சிறிய தந்தையால் அடித்தே கொல்லப்பட்ட 14 வயது சிறுமி…

Share

தந்தை மற்றும் சிறிய தந்தையின் தாக்குதலுக்கு இலக்கான 14 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் கம்பளை – மவுன்ட்டெம்பல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை குறித்த சிறுமியின் சிறிய தந்தை சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். இதனால் சுகயீனமடைந்த சிறுமி புலம்பியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தந்தையும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் அருகில் உள்ள வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற நிலையில், திடீரென மயங்கி விழுந்த சிறுமி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளையில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய நிபுனி நுவந்திகா பண்டார என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் சிற்றப்பா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை