Welcome to Jettamil

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் சான்றிதழ் அவசியம்

Share

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய எதிர்ப்பார்க்கும் எந்தவொரு இலங்கையரும், அத்திருமணத்தை பதிவு செய்ய பாதுகாப்பு அமைச்சின் ‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என சுற்றறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த ‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ முறைமை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக, பதிவாளர் நாயகம் டப்ளியூ.எம்.எம்.பி. வீரசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின் போதே தற்போதைய பொது திருமண பதிவில் உள்ள பல்வேறு குறைப்பாடுகள் அவதானிப்பட்டுள்ளன.

அதோடு பல போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கருப்பு பண சுத்திகரிப்பில் ஈடுபடுவோர் சூட்சுமமாக இலங்கை பெண்களை திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இத்தகைய சூழலிலேயே வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் போது பாதுகாப்பு அமைச்சின் ‘ பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ் ‘ கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.’ என பதிவார் நாயகம் வீரசேகர குறிப்பிட்டார்.

தற்போதுள்ள பொதுவான திருமணப் பதிவு நடைமுறையின் கீழ், திருமணப் பதிவு செயல்முறையைத் தொடர மூன்று ஆவணங்கள் மட்டுமே தேவை.

செல்லுபடியாகும் பாஸ்போர்ட், சிவில் நிலையை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பனவே அவையாகும்.

அந்த வகையில் குறித்த சுற்று நிருப நடைமுறையின் பிரகாரம் வெளிநாட்டில் இருக்கும் வாழ்க்கைத் துணைவர்கள் மருத்துவ வரலாறு, நாட்பட்ட நோய்கள் மற்றும் அவர்கள் கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டதா அல்லது தடுப்பூசியைப் பெற்றதா என்பதை விவரிக்கும் சுயமாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை