Welcome to Jettamil

அரசுகளை பொறுப்பு கூற வைக்கும் பிரகடனம் ஐநா மனித உரிமை பிரகடனம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவிப்பு

Share

அரசுகளை பொறுப்பு கூற வைக்கும் பிரகடனம் ஐநா மனித உரிமை பிரகடனம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் அங்கத்துவம் பெற்ற நாடுகளின் அரசுகளை மனித உரிமைகள் விவகாரங்களில் பொறுப்பு கூற வைக்கும் பிரகடனமாக ஐ.நா மனித உரிமை பிரகடனம் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி கனகராஜ் தெரிவித்தார்.

டிசம்பர் 10ஆம் திகதி 75 ஆவது மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை பாதுகாக்கும் வரைவு தொடர்பான நேற்றய கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டாம் உலக யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் யுத்தத்தின் பின்னர் மனித உரிமைகளை பாதுகாப்பதை முன்னேற்பாடாகக் கொண்டு ஐ.நா சபை தோற்றம் பெற்றது.

இந்தியாவில் பரதநாட்டியத்திற்கு பட்டப்படிப்பு வருவதற்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் பட்டப்படிப்பு உள்ளது – சிங்கப்பூர் கலை நிறுவன இயக்குநர் பெருமிதம்!

1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

30 ஏற்பாடுகளைக் கொண்ட இந்த மனித உரிமைகள் பிரகடனமானது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் மனைவியான எலினா ரூஸ்வெல்ட்டினால் ஆவணமாக உருவாக்கப்பட்டது.

ஒரு மனிதனுடைய சிவில் அரசியல் பொருளாதாரம் கலாச்சார உரிமைகளை பாதுகாப்பதற்கும் அவை மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதற்கான பரிகாரங்களை பெற்றுக் கொள்வதற்குமான ஏற்பாடுகள் குறித்த பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை சிறப்பு .

ஐ.நா மனித உரிமைகள் பிரகடனத்தை பின்பற்றி பல நாடுகளின் அரசியல் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பிலும் பல ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பில் சமத்துவம், மொழி,சித்திரவதை, எதேச்சையாகக் கைது செய்யப்படுதல், தடுத்து வைத்திருக்கும் போது பின்பற்ற வேண்டிய ஏற்பாடுகள் போன்ற பல விடயங்கள் ஐ.நா மனித உரிமை பிரகடனத்திலிருந்து இலங்கை தனது அரசியல் அமைப்பில் உள்வாங்கியுள்ளது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட ஐநா மனித உரிமைகள் பிரகடனம் சுமார் 75 ஆண்டுகளை கடக்கின்ற நிலையில் இன்னும் அவை தொடர்பில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால் அவற்றில் உள்வாங்கப்பட்ட விடயங்களே பிரதான காரணமாகும்.

எல்லை தாண்டி வந்த ஆறு இந்திய மீனவர்கள் காரைநகர் கடற்பகுதியில் வைத்து கைது!

இவற்றையெல்லாம் ஆதாரமாகக் கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாக்கும் நோக்கங்கள் கருதி சட்ட ஏற்பாடுகளை தெளிவுபடுத்தி ஒரு வரைபு ஒன்றை வழங்க உள்ளோம்.

இந்த வரைவுக்கு ஊடகவியலாளர்கள் சிவில் செயற்பாட்டாளர்கள் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும்.

ஆகவே ஐ.நா மனித உரிமை பிரகடனம் அரசுகளை பொறுப்பு கூற வைக்கும் ஒரு பிரகடனமாக விளங்குகின்ற நிலையில் அதன் செயற்பாட்டுத்தன்மை மனித உரிமைகளை நிலை நிறுத்தும் என்பதில் ஐயம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை