Welcome to Jettamil

மாலைதீவில் இருந்து இலங்கை வந்தடைந்த சொகுசு கப்பல்

Share

மாலைதீவில் இருந்து இலங்கை வந்தடைந்த சொகுசு கப்பல்

மாலைதீவிலிருந்து சில்வர் மூன் என்ற சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த சொகுசு கப்பலானது, பஹாமாஸ் கொடியுடன் வருகைத்தந்ததுடன் இந்த கப்பலில் 516 சுற்றுலாப் பயணிகளும் 400 பணிக்குழாமினரும் வருகை தந்துள்ளனர்.

குறித்த சுற்றுலாப் பயணிகள், கொழும்பு மற்றும் காலி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயணிகள் கப்பல் இன்று (19) பிற்பகல் மீண்டும் மாலைதீவு நோக்கிப் புறப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை