மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு தீவைப்பு!
மல்லாவி கல்விளானில், வயல் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கடந்த (15) அன்று இனந்தெரியாத நபர்களால் தீவைத்து கொழுத்தப்பட்டுள்ளது. இது விவசாயி ஒருவர், வயற் காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.