Welcome to Jettamil

கொழும்பு – கொம்பனித்தெரு புதிய மேம்பாலம் இன்று மக்கள் பாவனைக்காக திறப்பு!

Share

கொழும்பு – கொம்பனித்தெரு புதிய மேம்பாலம் இன்று மக்கள் பாவனைக்காக திறப்பு!

கொழும்பு நகரின் இதயம் போன்ற கொம்பனித்தெரு பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தின் ஒரு பகுதி இன்று (19.01.2026) மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலி பல்தசார் ஆகியோரால் இந்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் 2,700 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்ட இத்திட்டம், பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில் 3.7 பில்லியன் ரூபாய் மொத்தச் செலவில் முழுமையடைந்துள்ளது.

ஒரு வழிப் பாதையாகச் செயற்படும் இந்த மேம்பாலம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதான வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் வாகனங்களின் நெரிசலைக் குறைக்கும்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் கூட்டு முயற்சியால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், இத்திட்டத்திற்காக அகற்றப்பட்ட பொலிஸ் குடியிருப்புகளுக்குப் பதிலாக, நவீன வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகளை வழங்கும் பணிகளும் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை