Welcome to Jettamil

பிரதமர் ஹரிணி அமரசூரிய படித்த இந்தியக் கல்லூரியில், அவரது பெயரில் புதிய ஆய்வுக் கூடம் திறப்பு!

Share

பிரதமர் ஹரிணி அமரசூரிய படித்த இந்தியக் கல்லூரியில், அவரது பெயரில் புதிய ஆய்வுக் கூடம் திறப்பு!

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தான் கல்வி கற்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு (Hindu College) விஜயம் செய்தபோது, அங்கிருந்த புதிய ஆய்வுக் கூடம் ஒன்றுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆய்வுக் கூடத்தின் பெயர்:

டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் புதிய ஆய்வுக் கூடத்திற்கு “ஹரிணி அமரசூரிய சமூக மற்றும் இனவியல் ஆய்வுக் கூடம்” (Harini Amarasuriya Social & Ethnographic Research Lab) என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தக் கல்லூரியிலேயே சமூகவியல் இளங்கலைப் பட்டத்தைப் பூர்த்தி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் தான் கல்வி கற்ற வகுப்பறைகளைப் பார்வையிட்டு, மாணவியாக இருந்த காலத்தைப் பற்றி நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை