மன்னார் வங்காலையை சேர்ந்த இலங்கையின் பிரபல ஓவியரும்,சிற்பியுமான யோ.மெரின் ஜெரோமி மார்க் என்பவரால் யாழ் பல்கலைக்கழகத்திற்கு, மூன்றரை அடியில் குமார் சங்கக்காரவின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் சிலை குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இந்த அழகிய சிலையை வடிவமைப்பு செய்து நேர்த்தியாக உருவாக்கியது இலங்கையின் பிரபல ஓவியரும், சிற்பியும் மன்னார் வங்காலையை சேர்ந்த கலைஞர் யோ.மெரின் ஜெரோமி மார்க் என்பது குறிப்பிடத்தக்கது.